துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம்

புதுடில்லி : மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம், மகாபாரதம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1987 - 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர்.